கோவையில் பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை - வானதி சீனிவாசன் கண்டனம்

சட்டம் ஒழுங்கை சரிசெய்ய இயலாத திமுக ஆட்சியில், பெண்கள் மடிந்ததும், துடித்ததும் போதும்! என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை - வானதி சீனிவாசன் கண்டனம்
Published on

கோவை,

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

கோவையில் மதுக்கரை சிறப்புக் காவல் கமாண்டண்ட் அதிகாரி ஒருவர் பெண் காவலரை காவல் நிலைய அலுவலத்தில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் லட்சணத்தைப் பட்டவர்த்தனமாக்குகிறது.

காவலராகப் பணிபுரியும் பெண்ணின் பாதுகாப்பைக் காவல் நிலையத்தில் வைத்தே உறுதி செய்ய இயலாத திறனற்ற திமுக ஆட்சி எப்படி ஒரு சாதாரண பெண்ணின் பாதுகாப்பை உறுதி செய்யும்? வெல்வதை விடுங்கள், இந்த ஆட்சியில் எப்படி ஒரு பெண் நிம்மதியாக வாழ முடியும்?

சட்டம் ஒழுங்கை சரிசெய்ய இயலாத திமுக ஆட்சியில், பெண்கள் மடிந்ததும், துடித்ததும் போதும்! விடியா திமுக அரசை விரட்டியடிப்போம்! தமிழக மகளிரைக் காப்போம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com