கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை..பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு

17 வயது மாணவி கபடி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை..பயிற்சியாளர் மீது போக்சோ வழக்கு
Published on

சென்னையில் 17 வயதே ஆன மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, கபடி பயிற்சியாளர் ராஜு என்பவர் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தாய், தந்தை இல்லாததால், தனது பாட்டியின் ஆதரவோடு படித்துக்கொண்டு கபடி பயிற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்

இந்த நிலையில்தான், கடந்த ஒன்பதாம் தேதி முதல் மூன்று முறை தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அந்த சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பயிற்சியாளர் ராஜு அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட ராஜு, கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் கபடி போட்டியில் தங்கம் வென்ற பிரபல பயிற்சியாளர் ஆவார். தற்போது தலைமறைவாக உள்ள கபடி பயிற்சியாளர் ராஜுவை, அவரது செல்போன் எண் மற்றும் இருப்பிடத்தை வைத்து காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com