கோவில்பட்டியில் சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை உரிமையாளர் போக்சோவில் கைது

கோவில்பட்டியைச் சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர், 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
கோவில்பட்டியில் சிறுமியிடம் சில்மிஷம்: ஜவுளிக்கடை உரிமையாளர் போக்சோவில் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஜோதிநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 48). இவர் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரிடம் சுரேஷ் அநாகரிகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று ஜவுளிக்கடை உரிமையாளர் சுரேஷை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com