

சென்னை,
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறப்பு டி.ஜி.பி.க்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் திவீரமாக கண்காணிக்கும் என்றும், விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி.யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், சிறப்பு டி.ஜி.பி. மீது புகார் கொடுக்க வந்த பெண் அதிகாரியை தடுத்தார் என்பதற்காக எஸ்.பி.யை மட்டும் சஸ்பெண்ட் செய்தது ஏன்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையை மார்ச் 16 ஆம் தேதி தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை அன்றைய தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.