12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 12 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நாசரேத், முதலைமொழி பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் ராஜமாணிக்கம் (வயது 48) என்பவரை ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை; 1 லட்சத்து 8 ஆயிரம் அபராதம்

இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று (6.10.2026) மேற்சொன்ன ராஜமாணிக்கத்தை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com