13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முதியவரை போலீசார் கைது செய்தனர்.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது
Published on

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கடத்தூர் ஆண்டிபாளையம் காலனி பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 71). இவர் தற்போது திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பழங்கரை பகுதியில் வசித்து வருகிறார். இந்தநிலையில் பழனி, அவினாசியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து அவினாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பழனியை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com