13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் வாலிபர் ஒருவர், 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், கடந்த 2021-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில், திருச்செந்தூர் காயல்பட்டிணம் பகுதியை சேர்ந்த முகமதுஅலி மகன் முத்துவாப்பா (வயது 30) என்பவரை திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

இந்த வழக்கின் விசாரணை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மேற்சொன்ன நீதிமன்ற நீதிபதி முருகன் நேற்று (25.11.2026) முத்துவாப்பாவை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க உத்தரவிட்டும் தீர்ப்பளித்தார்.

X