15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு ஆயுள் தண்டனை

நெல்லையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு ஆயுள் தண்டனை
Published on

பாலியல் தொல்லை

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 63). தொழிலாளி. இவர் 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி, அக்கம் பக்கத்தினரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்து உள்ளார்.

அவர்கள் நெல்லை சந்திப்பு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ரவியை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி அன்பு செல்வி வழக்கை விசாரித்து ரவிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com