

தியாகதுருகத்தை சேர்ந்தவள் 6 வயது சிறுமி. சம்பவத்தன்று சிறுமியை அவளுடைய தாய், வீட்டில் தூங்க வைத்து விட்டு அருகில் உள்ள வீட்டுக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், கதவை தட்டி கூச்சல் போட்டதும் வீட்டின் உள்ளே இருந்து அதே பகுதியை சேர்ந்த நீதிமணி மகன் தொழிலாளி ரஞ்சித் (வயது 36) என்பவர் வெளியே ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று மகளிடம் விசாத்தபோது, ரஞ்சித் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதுகறித்த புகான்பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.