

சென்னை தியாகராயநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). எலட்ரிசீயனான இவர், 15 வயது சிறுமியிடம் கடந்த ஒரு வருடமாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்தார்.
சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே, அவரது பெற்றோர் இதுகுறித்து விசாரித்தனர். அப்போது கணேசனின் காம விளையாட்டில் சிறுமி சிக்கி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் காம விளையாட்டில் ஈடுபட்ட கணேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.