4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தந்தை கைது

குற்றாலம் அருகே 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தந்தை கைது
Published on

குற்றாலம் அருகே உள்ள ஒரு கிராமத்த சேர்ந்த கூலித் தொழிலாளிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தொழிலாளி, தனது 4 வயதுடைய குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அந்த குழந்தை தனது தாயிடம் கூறியது. இதுகுறித்து குழந்தையின் தாய் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com