5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மீனவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
Published on

கிருமாம்பாக்கம் அருகே புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் வயது (55). மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடலூர் பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமி வந்து இருந்தாள். தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை முனியப்பன் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதை யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்தநிலையில் உடலில் காயங்கள் இருப்பதை கண்ட பெற்றோர், விசாரித்தபோது சிறுமி நடந்த சம்பவத்தை கூறி அழுததாக தெரிகிறது. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com