சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பெண் விடுதி காப்பாளருக்கு 5 ஆண்டு சிறை

பாதிக்கப் பட்ட சிறுவனுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சிறுவனுக்கு பாலியல் தொல்லை: பெண் விடுதி காப்பாளருக்கு 5 ஆண்டு சிறை
Published on

தேனி,

போடி அருகே ஒரு குழந்தைகள் காப்பகத்தில், பெண் விடுதி காப்பாளராக பணியாற்றியவர் முனீஸ்வரி (வயது 29). கடந்த 2024-ம் ஆண்டு அந்த விடுதியில் தந்தையை இழந்த 10 வயது சிறுவன் தங்கி இருந்தான். அந்த சிறுவன் 4-ம் வகுப்பு படித்து வந்தான். அந்த சிறுவனுக்கு. முனீஸ்வரி பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் இதுகுறித்து போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரியை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் ரக்சிதா ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவில், முனீஸ்வரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி கணேசன் நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும் பாதிக்கப் பட்ட சிறுவனுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அதில், முனீஸ்வ ரிக்கு விதித்த ரூ.5 ஆயிரமும் அடங்கும் என்றும், மீதம் ரூ.3 லட்சத்து 95 ஆயிரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி அளித்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com