சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 5 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 5 ஆண்டு சிறை
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது 80.) இவர் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி செல்லையாவை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது சிவகங்கை போக்சோ விரைவு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கோகுல் முருகன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்லையாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com