சிறுமிக்கு பாலியல் தொல்லை; கோவில் பூசாரிக்கு தர்ம அடி

முக்கூடலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போக்சோ சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை; கோவில் பூசாரிக்கு தர்ம அடி
Published on

முக்கூடல்:

முக்கூடலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரிக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போக்சோ சட்டத்தில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-

கோவில் பூசாரி

நெல்லை மாவட்டம் முக்கூடல் குமாரவேல் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 63). கோவில் பூசாரியான இவர் நேற்று முன்தினம் 10 வயது சிறுமிக்கு பாலியல் தால்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ராமலிங்கத்தை பிடித்து தர்ம-அடி கொடுத்து, முக்கூடல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். எனினும் ராமலிங்கம் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார்.

போக்சோவில் கைது

இந்த நிலையில் நேற்று போலீசார், ராமலிங்கம் வீட்டிற்கு சென்றனர். அங்கிருந்த அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதுதொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ராமலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com