

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 65). இவர் 17 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வி.களத்தூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.