சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரை போலீசார் கைதுசெய்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

தஞ்சை,

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஆச்சாம் பட்டி மேலத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (33) சிறுமியின் வீட்டுக்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி அச்சத்தில் அலறினாள். உடனே மணிகண்டன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com