மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை - உயர்கல்வித்துறை விசாரணை


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை - உயர்கல்வித்துறை விசாரணை
x

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்பை முடித்துவிட்டு, அங்கேயே தற்காலிக பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பி.எச்.டி. பட்டம் பெறுவதில் இருந்து தற்போது வரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒரு பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக, அந்த பேராசிரியை மாநில மகளிர் உரிமை ஆணையம் மற்றும் உயர்கல்வித்துறையிடம் கடிதம் மூலம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து உயர்கல்வித்துறை மற்றும் மாநில மகளிர் உரிமை ஆணையம் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த புகார் தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு பல்கலைக்கழக பதிவாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

1 More update

Next Story