பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை

வானூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வேன் டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
Published on

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள திருவக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 26), வேன் டிரைவர். அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி நேற்று பள்ளிக்கு நடந்து சென்றார். அப்போது பாண்டியன் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி அந்த மாணவி தனது தாயாரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்தனர். பின்னர் வானூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com