சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது

சென்னை சூளைமேட்டில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - முதியவர் கைது
Published on

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர், எம்.எம்.டி.ஏ.காலனி பகுதியில் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், அந்த பெண்ணை திடீரென்று கட்டிப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார். அவரது பிடியில் இருந்து தப்பிய அந்த பெண், இதுகுறித்து சூளைமேடு போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீசார் நடத்திய விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்தவர் முதியவர் என்று தெரியவந்தது. அவரது பெயர் ரவி (வயது 60). அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர். அவரை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com