தனியார் மருத்துவமனையில் 'ஸ்கேன்' எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஊழியர் கைது


தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - ஊழியர் கைது
x

கோப்புப்படம் 

சென்னையில் தனியார் மருத்துவமனையில் ‘ஸ்கேன்’ எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை அருகே செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் அவர் பாடியநல்லூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சி.டி. 'ஸ்கேன்' எடுக்க வேண்டும் என கூறியதால் அந்த அறைக்குள் சென்றார்.

அப்போது அங்கிருந்த ஊழியர், இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த இளம்பெண் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடிவந்தார். இதுகுறித்து சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிளாட்சன் வழக்குப்பதிவு செய்து செங்குன்றத்தை அடுத்த வழுதிகம்பேடு பகுதியைச் சேர்ந்த மருத்துவமனை ஊழியர் ராஜ்குமார் (32 வயது) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

1 More update

Next Story