பணியிடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள கடையில் வேலை பார்த்த இளம்பெண்ணிடம், அந்த கடையின் உரிமையாளர் தனி அறையில் வைத்து பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார்.
பணியிடத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த முத்துக்குமார், அந்த பகுதியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து முன்பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 25 வயதுடைய பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 26-ம் தேதி மதியம், கடையில் உள்ள தனி அறையில் வைத்து அந்த பெண்ணிடம் முத்துக்குமார் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் சத்தமிட்டதைத் தொடர்ந்து, அருகில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். உடனே முத்துக்குமார், இந்த சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த பெண்ணிற்கு மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடினார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, முத்துக்குமாரை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com