8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை... போலீஸ் ஏட்டு போக்சோவில் அதிரடி கைது

இதுகுறித்து அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
கைது
Published on: 

நெல்லை,

8-ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

போலீஸ் ஏட்டு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் நேற்று முன்தினம் மிட்டாய் வாங்குவதற்காக அங்குள்ள கடைக்கு சென்றான். அப்போது அங்கு வந்த போலீஸ் ஏட்டு அந்தோணி ஜெனிபர் (வயது 34) நைசாக சிறுவனிடம் பேச்சுக்கொடுத்து மறைவான இடத்துக்கு அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன், அங்கிருந்து தனது வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தான். இதுகுறித்து அம்பை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

போக்சோ

இதுதொடர்பாக ஏட்டு அந்தோணி ஜெனிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்தனர். போலீஸ் ஏட்டுவின் சொந்த ஊர், அம்பை அருகே தெற்கு அகஸ்தியர்புரம் ஆகும்.

கடந்த 2013-ம் ஆண்டு தமிழ்நாடு இளைஞர் காவல்படையில் தேர்வான இவர், கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ்காரராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து மணிமுத்தாறு 9-வது பட்டாலியன் 'ஏ' கம்பெனியில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com