சிந்தாதிரிப்பேட்டையில் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல் - டிரைவர் கைது


சிந்தாதிரிப்பேட்டையில் தங்கும் விடுதியில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டல் - டிரைவர் கைது
x

கோப்புப்படம் 

மாணவி அளித்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சென்னை

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது மாணவி கன்னியாகுமரியில் உள்ள ஆயுர்வேத கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார்.

இதற்காக அவர், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். அவருடைய அறையில் செல்போன் இணைப்பு கிடைக்காததால் பக்கத்து அறைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த அறையில் தங்கியிருந்த நபர், திடீரென்று மாணவியை கட்டிபிடித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

உடனே அந்த மாணவி சத்தம் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த நபர் ஓடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பியோடியது சென்னை செங்குன்றத்தை சேர்ந்த டிரைவர் சுகேந்திரன் (31 வயது) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

1 More update

Next Story