முதல்-அமைச்சர் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: சக காவலர் கைது

புதுக்கோட்டை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
முதல்-அமைச்சர் நிகழ்ச்சிக்கு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: சக காவலர் கைது
Published on: 

சென்னை,

புதுக்கோட்டையில் கடந்த 2-ம் தேதி நடந்த அரசு விழாவில் ரூ.142 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். மேலும் அவர் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைத்தார். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

பாலியல் தொல்லை

இந்த நிலையில், புதுக்கோட்டையில் முதல்-அமைச்சர் விஜய் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்-அமைச்சர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வேனில் நெல்லைக்கு திரும்பும்போது தாழையூத்தை சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ. குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் காவலர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில், சிறப்பு எஸ்.ஐ. குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் பாளையங்கோட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். மேலும் பாலியல் புகாரை தொடர்ந்து சிறப்பு எஸ்.ஐ. குமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

X