பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2025 5:41 AM IST (Updated: 20 Jan 2025 5:41 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளிடம் அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அய்யப்பன் (வயது 52) என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், மாணவிகளுக்கு அய்யப்பன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தைகள் நல ஆலோசனை அதிகாரி அளித்த புகாரின்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் அய்யப்பனை கைது செய்தனர்.


Next Story