மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த த.வெ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது
Published on

மதுரை பரவை அருகே கீழமாத்தூர் காலனியை சேர்ந்தவர் உத்தமன் மகன் கண்ணன் (வயது 21). பெயிண்டரான இவர் சம்பவத்தன்று நள்ளிரவில் ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கு தூங்கிக் கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.  

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு மாணவியின் பெற்றோர் ஓடி வர கண்ணன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.   இதுகுறித்த புகாரின்பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதாமணி மற்றும் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கண்ணன் த.வெ.க. பிரமுகர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com