மாணவிக்கு பாலியல் தொல்லை:வாலிபருக்கு வலைவீச்சு

கடமலைக்குண்டு அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மாணவிக்கு பாலியல் தொல்லை:வாலிபருக்கு வலைவீச்சு
Published on

கடமலைக்குண்டு அருகே உள்ள உப்புத்துறை பகுதியை சேர்ந்தவர் வெயில்முத்து (வயது 23). இவர், கடந்த 2 ஆண்டுகளாக பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழகி வந்தார். இந்நிலையில் அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெயில்முத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com