மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: வடமாநில வாலிபர் கைது


மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: வடமாநில வாலிபர் கைது
x

மூதாட்டி கூச்சலிட்டதால் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பாதிரிவேடு அடுத்த தேர்வாய் கிராமத்தை சேர்ந்தவர் 80 வயது மூதாட்டி. நேற்று முன்தினம் இரவு மூதாட்டி வீட்டில் தூங்கி கொணாடிருந்தார். நள்ளிரவு வீடு புகுந்த வடமாநில வாலிபர் ஒருவர் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

மூதாட்டி கூச்சலிட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் (வயது 20) என்பவரை நேற்றிரவு கைது செய்தனர்:

1 More update

Next Story