

பரமக்குடி,
பரமக்குடி அருகே அரியகுடி கிராமத்தில் அருள்பாலிக்கும் சக்தி விநாயகர், நவக்கிரக கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி கோ பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி விஷேச மூல மந்திர ஹோமம் நடைபெற்றது. முன்னதாக மூலவர் சக்தி விநாயகருக்கு 11 வகையான திவ்ய திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து புனித நீர் மேள தாளங்கள் முழங்க கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மலேசியா வாழ் கோவில் குடிமக்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.