பெரியாச்சி அம்மன் கோவிலில் சக்தி கரக திருவிழா

அதிராம்பட்டினம் பெரியாச்சி அம்மன் கோவிலில் சக்தி கரக திருவிழா நடந்தது.
பெரியாச்சி அம்மன் கோவிலில் சக்தி கரக திருவிழா
Published on

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் மன்னப்பங்குளம் தென்கரையில் அமைந்துள்ள பெரியாச்சியம்மன் கோவில் திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கியது. விழாநாட்களில் அம்மனுக்கு தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியாச்சியம்மன் சக்தி கரக திருவிழா நடந்தது. முன்னதாக பெரியாச்சியம்மன் சக்தி கரகம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.

பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பூசாரி ராஜசேகரன் செய்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com