ஷாலிமார் - சென்னை கடற்கரை சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு!

இந்த நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும்.
சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
Published on: 

சென்னை,

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், மேற்கு வங்கத்தில் உள்ள ஷாலிமார் – சென்னை கடற்கரை இடையிலான சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஷாலிமார் – சென்னை கடற்கரை சிறப்பு ரெயில்

ஷாலிமார் – சென்னை கடற்கரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 02841) நவம்பர் 5-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 11.30 மணிக்கு ஷாலிமாரில் இருந்து புறப்பட்டு, மூன்றாவது நாள் அதிகாலை 3 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

சென்னை கடற்கரை – ஷாலிமார் சிறப்பு ரெயில்

மறுமார்க்கத்தில், சென்னை கடற்கரை – ஷாலிமார் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 02842) நவம்பர் 7-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 1.45 மணிக்கு ஷாலிமாரை சென்றடையும்.

நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

இந்த நீட்டிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (நவம்பர் 5-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள நேர அட்டவணை, நிறுத்தங்கள் மற்றும் பெட்டிகளின் அமைப்பிலேயே இந்த சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

X