

சென்னை,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைப் பிரிவுகளில் ஒன்றான தி.மு.க. இளைஞர் அணி இன்று தனது 47-வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி, தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான மிசா Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் திமுக இளைஞரணி இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா..!
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.