மகாதேவர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு

திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
மகாதேவர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
Published on

களியக்காவிளை, 

குமரி மாவட்டத்தில் உள்ள 2-வது சிவாலயமான திக்குறிச்சி மகா தேவர் கோவிலில் நேற்று சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திபகவான் மற்றும் மூலவரான மகாதேவருக்கு பால், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து பிரதோஷ சிவேலி நடைபெற்றது. இந்த பூஜைகளில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதுபோல் குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்கள், சிவாலய ஓட்டம் நடைபெறும் கோவில்களில் சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com