திமுகவினர் கூறும் தவறான தகவல்களை பெ.சண்முகம் பேசி வருகிறார் - சிடிஆர் நிர்மல்குமார்

தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்றால் அதனை பெ.சண்முகம் நிரூபிக்க வேண்டும் என்று பெ.சண்முகம் கூறினார்.
பெ.சண்முகம்
Published on: 

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஸ்டாலின் தன்னுடைய உண்மையான முகத்தை நேற்று பிரச்சாரத்தில் வெளிப்படுத்தி இருந்தார். தந்தையும், மகனும் தம் மனதில் இருப்பது மற்றும் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இனி எந்த தேர்தலிலும் வெற்றி பெறப்போவது கிடையாது. எல்லா தேர்தலிலும் தோல்வி தான்.

மன்னிப்பு கேட்க வேண்டும்.

முக ஸ்டாலின் பேச்சு பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் தருவோம். விரக்தியில் பேசி வருகின்றனர். சமூகத்துக்கு திமுகவினர் கேடு விளைவிக்கின்றனர். இவர்கள் விரட்டி அடிக்கப்பட வேண்டிய நபர்கள். முக ஸ்டாலினும், உதயநிதியும் தங்கள் வக்கிரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பட்டியலின பெண் குறித்து ஸ்டாலின் மோசமாக பேசி இருக்கிறார். ஸ்டாலின் தரம் தாழ்ந்து பேசத் தொடங்கி இருக்கிறார். தவெக பெண் வேட்பாளரை உருவகேலி செய்த ஸ்டாலின் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பணம் கொடுக்கப்படவில்லை

தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. திமுகவினர் கூறும் தவறான தகவல்களை பெ.சண்முகம் பேசி வருகிறார். தவெக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்றால் அதனை பெ.சண்முகம் நிரூபிக்க வேண்டும். எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக தவெக சார்பில் போராட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமிக்கு இனி எப்போதும் வெற்றி கிடைக்காது.

திமுக, அதிமுக, பாஜக இணைந்து தேர்தலை சந்திக்கும் நிலை வரும்” என்றார். முன்னதாக தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் திமுக, அதிமுக, தவெக என மூன்று கட்சிகளும் பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ சண்முகம் கூறியிருந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com