தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவராக சண்முகராஜன் மீண்டும் தேர்வு

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவராக சண்முகராஜன் மீண்டும் தேர்வு 6-வது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவராக சண்முகராஜன் மீண்டும் தேர்வு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தேர்தல் கமிஷனர் செ.சுருளிராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் (பதவி காலம் 2021-2024) சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் மாநில தலைவராக இரா.சண்முகராஜன், துணை தலைவர்களாக (நகரம்) தே.விக்டர் பால்ராஜ், அரங்க அனந்த கிருஷ்ணன், (புறநகரம்) ஆ.துரைப்பாண்டி, த.அமிர்தகுமார், (பொது) என்.தண்டபாணி, ப.சரவணக்குமரன், (மகளிர்) இரா.பிரேமா, ப.ஆலீஸ் ஷீலா, மாநில பொருளாளராக ஆர்.சி.எஸ்.குமார், அமைப்பு செயலாளராக இல.முரளி, மாநில பிரசார செயலாளராக எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைமை நிலைய செயலாளராக வெ.மகேந்திரகுமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

மாநில தலைவராக இரா.சண்முகராஜன் போட்டியின்றி 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com