சாஸ்தா கோவிலில் ஆடி திருவிழா

சாஸ்தா கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்றது.
சாஸ்தா கோவிலில் ஆடி திருவிழா
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே அருணாபேரியில் பிரசித்தி பெற்ற மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவிலின் ஆடி மாத திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 3-வது புதன்கிழமை தொடங்கி 2 நாட்கள் திருவிழா நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் காலை 9 மணி அளவில் குற்றால தீர்த்தம் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமமும், அதனைத் தொடர்ந்து சாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

மாலையில் கீழப்பாவூரில் இருந்து குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி ஊர்வலமாக அருணாபேரி கிராமத்திற்கு வந்தார். அங்கு முத்தாரம்மன் கோவிலில் பூஜை நடைபெற்ற பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சாஸ்தா கோவிலை நோக்கி கொண்டு வரப்பட்டது. வழி நெடுகிலும் நின்று பக்தர்கள் சாஸ்தாவிற்கு மாலை அணிவித்து பூஜை செய்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலை வந்தடைந்த சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலையில் சிறப்பு பூஜைகளுடன் கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com