குடியுரிமை சான்று கிடைப்பதில் தாமதம்: அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி மருத்துவக்கல்லூரியில் சேர அனுமதி - ஐகோர்ட்டு உத்தரவு

குடியுரிமை சான்று கிடைப்பதில் தாமதம்: அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவிக்கு மருத்துவக்கல்லூரியில் சேர அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமை சான்று கிடைப்பதில் தாமதம்: அமெரிக்காவில் பிறந்த தமிழக மாணவி மருத்துவக்கல்லூரியில் சேர அனுமதி - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னையைச் சேர்ந்தவர் அபிராமி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் அமெரிக்காவில் பிறந்தேன். 2001-ம் ஆண்டு 7 மாத குழந்தையாக இருந்தபோது பெற்றோருடன் தமிழகம் வந்தேன். அதன்பின்னர், பள்ளிப்படிப்பை தமிழகத்தில் முடித்தேன். 18 வயது பூர்த்தியடைந்ததை தொடர்ந்து, இந்திய குடியுரிமை கோரி கடந்த ஜூன் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மனு அனுப்பினேன். அந்த மனு பரிசீலனையில் உள்ளது.

தற்போது எனக்கு, சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்துள்ளது. ஆகஸ்டு 8-ந் தேதிக்குள் இந்திய குடியுரிமை சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் சேர்க்கைக்கான அனுமதி வழங்கப்பட்டது. குடியுரிமை சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் என்னை மருத்துவ கல்லூரியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரை மருத்துவக்கல்லூரியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மனுதாரர் 3 மாதத்துக்குள் குடியுரிமை சான்றை பெற்று கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com