பிரபல கராத்தே பயிற்சியாளர் ஷிகான் ஹுசைனி காலமானார்

நடிகரும், பிரபல கராத்தே மாஸ்டருமான ஷிஹான் ஹுசைனி, உடல்நலக்குறைவால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெசண்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல் பின்னர் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷிகான் ஹுசைனி பத்ரி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
Related Tags :
Next Story






