சிவாஜி கணேசன் பிறந்த தின விழா

புளியங்குடியில் சிவாஜி கணேசன் பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது.
சிவாஜி கணேசன் பிறந்த தின விழா
Published on

புளியங்குடி:

புளியங்குடியில் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா சிவாஜி சமூக நலப் பேரவையின் சார்பில் டி.என்.புதுக்குடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் நடைபெற்றது. நிழ்ச்சிக்கு புதுச்சேரி சுப்பையா தலைமை தாங்கினார். நிழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் கோமதிநாயகம், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், நகரமன்ற உறுப்பினருமான சங்கரநாராயணன், மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதி ஜாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் கட்சித் தலைவர் பால்ராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சமூக ஆர்வலர் அருணாசலம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் வேலு, அமராவதி கல்வி குழும தாளாளர் பாலசுப்பிரமணியன், நகர தலைமை ரஜினி ரசிகர் மன்ற தலைவர் கருப்பையா மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிவாஜி கணேசன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com