சிவசக்தி மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்

சிவசக்தி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்த னர்
சிவசக்தி மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்
Published on

சிவகிரி:

சிவகிரி பஸ் நிலையம் அருகே கீழமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சிவசக்தி மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதைமுன்னிட்டு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, விக்கிரகங்களுக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி, வாஸ்து சாந்தி பூஜை, அஷ்ட பந்தன காப்பு கட்டுதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் இரவில் சிவகிரி கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக உள்ள தெப்பத்திலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சிவசக்தி மாரியம்மன் கோவிலை அடைந்தனர். தொடர்ந்து கோவிலில் வைத்து அம்மன் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் தீர்த்தம், பால், தயிர், நெய், சந்தனம், பன்னீர், தேன் போன்ற நறுமண பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

ஏற்பாடுகளை தலைவர் திருஞானம், துணை தலைவர் ராம மூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியன், செயலாளர் அய்யனார், வீரபாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com