திருமண மேடையில் மணப்பெண் ரூபத்தில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

தாலி கட்டிய பின் மணப்பெண்ணின் முகத்தை பார்த்து மாப்பிள்ளை அதிர்ச்சியடைந்தார்.
திருமண மேடையில் மணப்பெண் ரூபத்தில் மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள பிரம்மபுரியைச் சேர்ந்தவர், முகமது அசீம் (22). இவருக்கு ஷாம்லி டிஸ்ட்ரிக்கைச் சேர்ந்த மந்தாஷா என்ற இளம்பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. அந்த திருமணத்தை, மந்தாஷாவின் சகோதரர் நதீம் மற்றும் அவரது மனைவி ஷைதா ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த நிலையில், அவர்களுடைய திருமணம் கடந்த மாதம் 31ஆம் தேதி நடைபெற்றுள்ளது. த

திருமணம் முடிந்தப் பிறகு மணப்பெண்ணின் முக்காட்டைத் தூக்கி மணமகன் முகமது அசீம் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது, நிச்சயிக்கப்பட்ட மணப்பெண் மந்தாஷாவுக்குப் பதில் அவரது விதவைத் தாயார் மணக்கோலத்தில் இருந்துள்ளார். இதனால், தாம் ஏமாற்றப்பட்டதைக் கண்டு மணப்பெண்ணின் குடும்பத்தார் மீது அசீம் போலீஸில் புகார் அளித்தார்.

மேலும், இத்திருமண விழாவுக்காக ரூ.5 லட்சம் செலவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தற்போது இருதரப்பிலும் சமாதானம் அடைந்திருப்பதாகவும், அசீம் தன்னுடைய புகாரை வாபஸ் பெற்றுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com