10-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியால் அதிர்ச்சி - தந்தை தற்கொலை...!

ஈரோடு அருகே 10-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை செய்துள்ளார்.
10-ம் வகுப்பு தேர்வில் மகன் தோல்வியால் அதிர்ச்சி - தந்தை தற்கொலை...!
Published on

ஈரோடு,

அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் அப்புசாமி (45) அவரது மனைவி சுமதி(38) அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வருகிறார்.

சுமதி பவானி அருகே உள்ள தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு சஞ்சய்(15) மற்றும் சந்துரு(13) என்ற இரு மகன்கள் உள்ளனர். சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

தேர்வு முடிவில் மூன்று பாடத்தில் தேல்வி ஆனதால் அவரது தந்தை அப்புசாமி சஞ்சயை மீண்டும் டுட்டோரியல் காலேஜில் சேர்த்துவிட்டு உள்ளார். ஆனால் சஞ்சய் வகுப்புக்கு செல்ல மறுத்ததால் அப்புசாமி மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து அப்புசாமி குடித்து விட்டார். வயிற்று வலியால் துடித்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சையில் இருந்த சாமி நேற்று காலை சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com