பள்ளிபாளையம் அருகே கோர விபத்து: லாரி-இருசக்கர வாகனம் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிபாளையம் அருகே கோர விபத்து: லாரி-இருசக்கர வாகனம் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி
Published on: 

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வளைவில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரி ஒன்று வளைவில் திரும்ப முயன்றபோது, எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் அதன் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பலத்த காயமடைந்தார்.

Also Read
திமுக - காங்கிரஸ் கூட்டணியை இனியும் ஆட்சியில் தொடரவிட்டால்... - நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை
பள்ளிபாளையம் அருகே கோர விபத்து: லாரி-இருசக்கர வாகனம் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி

உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com