அதிர்ச்சி சம்பவம்: வீடு புகுந்து தாக்கி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிர்ச்சி சம்பவம்: வீடு புகுந்து தாக்கி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24). மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார். கடந்த 22-ந்தேதி ஒரு வீட்டிற்கு சென்ற அவர் அங்கு தனியாக இருந்த 77 வயது மூதாட்டியிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அவரிடம் மூதாட்டி பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் போதையில் மூதாட்டியை அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மூதாட்டி மயக்கம் அடைந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக நினைத்து அஜித் குமார் சென்று விட்டார்.

மறுநாள் காலை மூதாட்டி வீட்டுக்கு உறவினர் சென்றபோது அந்த மூதாட்டி காயத்துடன் இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது மகள் உடனடியாக அவரது தாயாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com