கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தம்பதி - அதிர்ச்சி சம்பவம்

கடலூரில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை அடித்துக் கொன்ற கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.
கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தம்பதி - அதிர்ச்சி சம்பவம்
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வசிஸ்டபுரம் பகுதியைச் சேர்ந்த மலர் என்பவர், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரியிடம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒன்பது லட்சம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். ஆனால் கடனை ராஜேஸ்வரி திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இது தொடர்பாக திட்டக்குடி காவல்நிலையத்திலும் மலர் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், ராஜேஸ்வரியின் வீட்டிற்கு சென்று மலர் பணத்தை கேட்டுள்ளார். அப்போது பணத்தை தர மறுத்து ராஜேஸ்வரியும் அவரது கணவர் முருகனும் மலரை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த மலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கணவன்-மனைவியை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com