அதிர்ச்சி சம்பவம்: சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்த ஆண் சடலம்

பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்து தலை இல்லாத சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதிர்ச்சி சம்பவம்: சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சூட்கேசில் இருந்த ஆண் சடலம்
Published on

சென்னை,

சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் சூட்கேஸில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் தலை இல்லாமல் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 4வது பிளாட்பார்மில் கேட்பாரற்றுக் கிடந்த சூட்கேசில் பார்த்தபோது தலை இல்லாத நிலையில் ஆண் சடலம் இருந்துள்ளது.

இந்நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை கைப்பற்றி பெரம்பூர் ரெயில்வே போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது சம்பவ இடத்தில் ரெயில்வே எஸ்.பி. ஆய்வு நடத்தி வருகிறார்.

மர்மநபர்கள் ஒருவரை கொலை செய்து சூட்கேசில் உடலை வைத்துச் சென்றுள்ள சம்பவம் பெரம்பூர் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com