ஆசை 60 நாள், மோகம் 30 நாள்: கிணத்துக்கடவு அருகே இளம்பெண் கொலையில் திடுக்கிடும் தகவல்

இரவு நேரத்தில் உல்லாசமாக இருந்தால் சரி ஆகிவிடும் என்று பழனிமுத்து சங்கீதாவை அழைத்துள்ளார். அதற்கு சங்கீதா மறுத்துள்ளார்.
இளம்பெண் கொலை
Published on

கோவை,

கள்ளக்காதலியை கொன்று எரித்த வாலிபர் தந்தையுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை -பொள்ளாச்சி நான்கு வழிச்சாலை கிணத்துக்கடவு அருகே நல்லட்டிபாளையத்தில் தனியார் நிறுவனத்தின் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று முன்தினம் 30 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் தீயில் எரிந்து கருகிய நிலையில் கிடந்தது.

இது குறித்து நல்லட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் மதுக்கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இளம்பெண்ணை எரித்துக் கொலை செய்த மர்மநபர்களை கண்டுபிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மேற்பார்வையில் பேரூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமரா பதிவு

இந்த தனிப்படை போலீசார் கிணத்துக்கடவு, கோவில்பாளையம், வடசித்தூர், வடக்கிபாளை யம் மற்றும் தமிழக -கேரள எல்லையில் உள்ள 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக் களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்குகளிலும் விசாரணை நடத்தினர்.இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கண்காணிப்பு கேமராவில் ஒரு மோட்டார் சைக்கிள் அடிக்கடி வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த நாளில். தனியாருக்கு சொந்தமான இடத்தில் திடீரென்று தீப்பிடித்து எரியும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார், அடிக்கடி வந்த மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து அது எங்கிருந்து வந்தது என்று விசாரித்தனர். இதில் அந்த மோட்டார் சைக்கிள் பொள்ளாச்சியில் இருந்து வந்ததும், அதில் 2 பேர் வந்ததும் தெரிய வந்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்த ஒருவருக்கு பெண் கொலையில் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகத்தினர்.

பெண் கொலை

இந்தநிலையில் அந்த நபர் அங்குள்ள ஒரு எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றும் பழனிமுத்து (வயது 35) என்பதும் அவருடன் வந்து சென்றவர் அவரது தந்தையான குருநாதன் (வயது 60) என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

குருநாதனின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் குடியேறி இங்கு வேலை பார்த்துள்ளனர். குருநாதன் அவரது மகன் பழனிமுத்து ஆகியோர் பொளாச்சியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளனர்.

அப்போது அதே ஜவுளிக்கடையில் வேலைபார்த்த ஒரு பெண்ணை ஒரு பெண்ணை பழனிமுத்து காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு 13 வயது மற்றும் 7 வயதில் 2 மகன்கள் இருக்கிறார்கள்.

கள்ளக்காதல் விவகாரம்

இந்தநிலையில் அந்த ஜவுளிக்கடையில் பணியாற்றிய சங்கீதா (வயது 30) என்ற பெண்ணுடன் பழனிமுத்துக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆனவர். பொள்ளாச்சி ஜமீன் கோட்டாம்பட்டியை சேர்ந்தவர். சங்கீதாவுடன் பழனிமுத்து நெருங்கி பழகினார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் பழனிமுத்துவின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக பழனிமுத்துவும் அவரது மனைவியும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அதேசமயம் சங்கீதாவுடனான நெருக்கத்தை பழனி முத்து அதிகரித்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சங்கீதா அவரது குடும்பத்தை பிரிந்து பழனிமுத்துவுடன் வந்தார். 2 பேரும் கிணத்துகடவு காமராஜர் நகரில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கினர். அங்கு 2 பேரும் உல்லாசமாக இருந்து வந்தனர்.

ஆசை 60 நாள், மோகம் 30 நாள்

ஆசை 60 நாள், மோகம் 30 நாள் என்பதை போல அவர்களது மகிழ்ச்சி வெகுநாட்கள் நீடிக்கவில்லை. 2 பேருக்கும். இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இருவருக்கும் பணப்பிரச்சினையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவும் பழனிமுத்துவுக்கும், கள்ளக்காதலி சங்கீதாவுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டிருக்கிறது. உல்லாசமாக இருந்தால் சரி ஆகிவிடும் என்று பழனிமுத்து சங்கீதாவை அழைத்துள்ளார். அதற்கு சங்கீதா மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த பழனிமுத்து, சுத்தியை எடுத்து சங்கீதாவை குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து இறந்துள்ளார்.

காட்டுப்பகுதி

சங்கீதாவை கொலை செய்ததை மறைக்க பழனி முத்து முயன்றுள்ளார். இதற்காக தனது தந்தையான குருநாதனுக்கு போனில் பேசி ஆலோசனை கேட்டுள்ளார்.அவரும் அதிர்ச்சி அடைந்து பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவுக்கு வந்துள்ளார். 2 பேரும் சேர்ந்து சங்கீதாவின் பிணத்தை சாக்குப்பையில் திணித்து

கட்டியிருக்கிறார்கள். பின்னா மோட்டார்சைக்கிளில் பிணத்தை ஏற்றிக் கொண்டு வேலை பார்த்த தொழிற்சாலை அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு பழனிமுத்து சென்று இருக்கிறார். கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கியிருக்கிறார்கள். பெட்ரோலை சங்கீதா உடலில் ஊற்றி எரித்துள்ளனர். அதன்பின் வின் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பிறகு பழனிமுத்து வேலைக்கும் செல்லாமல் தலைமறைஆக இருந்துள்ளார். கண்கானிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்து அவர் பணியாற்றிய தொழிற்சாலையில் அவர் வேலைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

உடனே சந்தேகம் கொண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது கொலையாளி அவர் தான் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பழனிமுத்துவையும், கொலையை மறைக்க உடந்தையாக இருந்த அவரது தந்தை குருநாதனை யும் போலீசார் கைது செய்தனர். இன்று 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com