சென்னையில் காரை ஏற்றி இளம்பெண் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்

சென்னையில் கோயம்பேட்டில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னையில் காரை ஏற்றி இளம்பெண் கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்
Published on

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் அரிச்சான்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வருபவர் நவிலேஸ்வரன். இவரது மகள் யான்சி (வயது 18). கடந்த ஆண்டு பிளஸ்-2 படிப்பை முடித்து விட்டு வீட் டில் இருந்து வந்துள்ளார்.

நட்சத்திர விடுதி

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கமான தனது தோழியை பார்ப்பதற்காக சென்னை ராமாபுரம் வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு யான்சி மற்றும் அவரது தோழிகள் என 6 பேர், 3 இருசக் கர வாகனங்களில் கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதி மது பாருக்கு சென்றனர்.

அங்கு மதுபானம் அருந்திவிட்டு அனைவரும் உற்சாகமாக நடனம் ஆடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதே பாருக்கு தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்த வாலிபர்கள் சிலரும் மதுபானம் அருந்திவிட்டு நடனம் ஆடினர்.

அப்போது யான்சி தரப்பினருக்கும், அந்த வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள் இரு தரப்பினரையும் பாரில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பிவைத்தனர்.

பாரில் தகராறு

வெளியே வந்த பின்னரும் அவர்கள் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கிக்கொண்டதாக கூறப்படு கிறது. அப்போது அங்கு வந்த 'பவுன்சர்'கள், இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவம் காரணமாக உடனடியாக மதுபான பாரும் மூடப்பட்டது.

அதன்பிறகு யான்சி மற்றும் அவரது தோழிகள் தாங்கள் வந்த இருசக்கர வாகனங்களில் திருமங்கலம் நோக்கி புறப்பட்டனர். கோயம்பேடு மேம்பாலம் அருகே சென்றபோது, மதுபான பாரில் மோதலில் ஈடுபட்ட வாலிபர்கள் காரில் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த யான்சி, இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அங்கிருந்த கல்லை எடுத்து அந்த காரின் மீது வீசியதாக கூறப்படுகிறது. உடனே காரில் இருந்தவர்கள். காரை வேகமாக ஓட்டி வந்து யான்சி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ஏற்றியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட யான்சி, தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற 17 வயது சிறுமி பலத்த காயம் அடைந்தார். உடனே அந்த கும்பல் காரில் தப்பிச்சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், கொலையான யான்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 17 வயது சிறுமியையும் மீட்டு அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும், காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். இதனையடுத்து காரில் வந்த சென்னை அரும்பாக் கத்தைச் சேர்ந்த பாலகுரு (21). சூளைமேட்டைச் சேர்ந்த ஜோஸ்வா (19), நெற்குன்றத்தைச் சேர்ந்த கல்லூரி மாண வர் கிஷோர் குமார் (19) மற்றும் சுமன், சக்திவேல், மோகன சுந்தரம், ராகுல் ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.

தற்போது கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதுபான பாரில் என்ன நடந்தது? எந்த காரணத்தால் இந்த தகராறு, கொலை அளவுக்கு சென்றது? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னையில் கோயம்பேட்டில் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பாரில் மோதல் ஏற்பட்டது ஏன் என்பது பற்றி யான்சியுடன் சென்ற ஆண் நண்பர் ஒருவர் வீடியோவில் பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.

வேறு ஒருவர் என்ன நடந்தது என்று அந்த வீடியோ வாலிபரிடம் கேட்டு வீடியோ பதிவு செய்தார். அதில் பாரில் தங்களுடன் வந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகாவும் அதன் காரணமாகவே சண்டை ஏற்பட்டதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

வீடியோவில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில்,

நேற்று முன் தினம் இரவு கோயம்பேட்டில் உள்ளபாருக்கு நானும், எனது நண்பனும் சென்று இருந்தோம், ஆண், பெண் இருவரும் அனுமதிக்கப்படும் பாருக்கு நாங்கள் அடிக்கடி செல்வதுண்டு.

பெண்களுடன் நடனம்

நேற்று முன் தினமும் நாங்கள் அங்கிருந்த போது எங்களுக்கு தெரிந்த பெண்ணான யான்சியும் அங்கு வருவதாக கூறினார். அவரும் அவரது தோழி ஒருவரும் வெளியில் இருந்து வாடகை வாகனத்தில் அங்கு வந்தனர். 9.30 மணியளவில் நாங்கள் பாருக்குள் நுழைந்தோம்.

எங்களோடு வந்த பெண்களில் ஒருவருக்கு 19 வயதாகிறது. இன்னொருவருக்கு 17 வயதாகிறது. எனக்கும், எனது நண்பருக்கும் 21 வயதாகிவிட்டது. பாருக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் அங்கு 2 பெண்களும் கூட்டத்தோடு சேர்ந்து நடனமாடினார்கள். நாங்களும் நடனமாடினோம்.

நாங்கள் முன்னாள் சென்று விட்ட நிலையில் 2 பெண்களும் பீர் குடித்து விட்டு நடனம் ஆடி உள்ளனர். பெண்களோடு இதுபோன்ற பப்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாது என்பதால் அவர்களையும் அழைத்து சென்றோம். தனியாக சென்றால் நுழைவு கட்டணமாக மட்டும் ரூ.1,500 வரை செலுத்த வேண்டி இருக்கும்.

பாலியல் சீண்டல்

பாரில் நடனமாடி கொண்டு இருந்தபோது எங்களுடன் வந்த பெண்ணின் இடுப்பை அங்கு இருந்த சிலர் கிள்ளி பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்கள் எங்களிடம் கூறியதை தொடர்ந்து நான் இடுப்பை கிள்ளிய வாலிபரிடம் சென்று ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று தட்டி கேட்டேன். அவர்கள் என்னை தாக்கினார்கள்.

அதனால் பவுண்சர்களிடம் போய் புகார் அளித்தோம் அவர்கள் வந்து இதுபோல செய்யக்கூடாது என கண்டித்தனர். அதன் பிறகு அந்த வாலிபர்களும் அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டனர்.

ஆஅனால் அவர்கள் அங்கிருந்த மற்ற பெண்கள் மீதும் கைகளை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அப்போது வேறொருவருக்கு இடையேயும் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து எல்லோரும் பாரில் இருந்தவர்களை வெளியேற்றினார்கள். நாங்களும் வெளியில் வந்துவிட்டோம்.

ஓட்டலுக்கு வெளியில் வந்த பின்னர் கோயம்பேடு பாலத்துக்கு கீழே திருமங்கலம் நோக்கி செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளில் நாங்கள் புறப்பட்டோம்.

போதையில் இருந்த பெண்கள்

ஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேரும் செல்வதற்கு ஆயுத்தமானோம். 2 பெண்களும் போதையில் இருந்ததால் அவர்கள் கீழே விழுந்துவிடக்கூடாது என்பதால் அவர்களை நடுவில் உட்கார வைத்து நான் பின்னால் அமர்ந்து இருந்தேன். என் நண்பர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.

அப்போது எங்களுடன் தகராறு செய்தவர்களும் வெளியில் வந்து காரில் புறப்பட்டனர். இந்த நேரத்தில் அவர்களோடுஏற்கனவே பாரில் தகராறு செய்த இன்னொரு தரப்பை சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

அப்போது எங்களோடு பாரில் மோதலில் ஈடுபட்டவர்கள் நாங்கள் 4 பேரும் மோட்டார் சைக்கிளில் புறப்படுவதை பார்த்து எங்கள் மீது காரை வேகமாக மோதினார்கள்.

முதலில் ஒரு முறை இடித்தனர். இதில் மோட்டார் சைக்கிள் கீழே விழவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் காரை பின்னால் எடுத்து சென்று வேகமாக வந்து மோதினார்கள். இதில்தான் நடுவில் இருந்த 2 பெண்களு தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரின் தலையும் கல்லில் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

யான்சி சம்பவ இடத்திலேயே உயிரி இழந்துவிட்டார். 17 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் பின்னர் காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 2 பெண்களையும் பஸ் நிலையத்திற்கு சென்று இறக்கி விட வேண்டும் என்றுதான் திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதற்குள் இப்படி ஆகி விட்டது என்றார். இவ்வாறு கொலையுண்ட நண்பர் வீடியோவில் தெரிவித்து உள்ளார். தனது பெயரை அஸ்வந்த் என்று அந்த வாலிபர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com