மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: ரூ.500-க்கு மேல் ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்க முடியாது

ரூ.500க்கு மேல் ரொக்க பரிவர்த்தனை டாஸ்மாக் கடைகளில் இனி கிடையாது.
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: ரூ.500-க்கு மேல் ரொக்கம் கொடுத்து சரக்கு வாங்க முடியாது
Published on

சென்னை,

தமிழகத்தில், மதுபான ஆலை முதல், மது கடைகளில் விற்பது வரை கணினிமயமாக்கும் திட்டம், 2024ல் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், கடையில் விற்கப்படும் ஒவ்வொரு மது பாட் டிலும், கையடக்க வடிவில் உள்ள கருவியில், 'ஸ்கேன்' செய்து விற்கப்படுகிறது. இதன் வாயிலாக, 'கியூ.ஆர். குறியீடை ஸ்கேன்' செய்து, டிஜிட்டல் முறையிலும் பணம் செலுத்தலாம்.

இருப்பினும், மது கடைகளில் தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும், வார, விசேஷ விடுமுறை நாட்களில், அதை விட அதிகமாகவும் விற்பனை உள்ள நிலையில், 80 சதவீதத்திற்கு மேல் ரொக்க பணம் தான் வசூலாகிறது. அந்த பணத்தை பணியாளர்கள், கடை களில் இருப்பு வைத்து, அடுத்த நாள் வங்கியில் செலுத்துகின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்லும் பணத்தை கொள்ளை அடிப்பதும் நடக்கிறது.

தற்போது, மதுபிரி யர்கள் தாங்கள் விரும்பும் மது வகைகளை, டாஸ்மாக் இணையதளத்தில் தேர்வு செய்து, அதன் வாயிலாகவே பணமும் செலுத்தி, அதற்கான குறியீட்டை கடைகளில் காட்டி, மது வகைகள் வாங்கலாம். இந்த முறையில் வாங்குவோருக்கு, மது பாட்டில்களை வழங்க தாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இதற்கு, ரொக்க பணம் வசூலிக்க, பணியாளர்கள் ஆர்வம் காட்டுவதே முக்கிய காரணமாக இருப்பதாக, டாஸ்மாக் கண்டறிந்துள்ளது.

எனவே, ரொக்க பணப் புழக்கத்தை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடைகளில் மது பாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்கவும், சில்லரை தட்டுப்பாட்டு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்கப்பட உள்ளது. இதற்காக, 500 ரூபாய் வரை மட்டுமே ரொக்க பணமாகவும், அதற்கு மேல் டிஜிட்டல் முறையில் வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, விரைவில் கடை களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com